யுனைடெட் ஸ்டேட்ஸ் கல்லூரி கரப்பந்தாட்ட போட்டியில் பெண்களுக்கான விளையாட்டு நிகழ்வினை கண வந்த பெருந்திரளான பார்வையாளர்களினால் உலக சாதனையொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
புதனன்று (30) நடைபெற்ற பெண்கள் விளையாட்டு நிகழ்வைக் காண அதிக கூட்டம் மெமோரியல் மைதானத்தில் நிரம்பியது.
இந்த ஆட்டத்தில் ஐந்து முறை NCAA சாம்பியனான நெப்ராஸ்கா ஹஸ்கர்ஸ் அணி ஒமாஹாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
2022 மகளிர் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் நவ் கேம்பில் பார்சிலோனா வொல்ப்ஸ்பர்க்கில் விளையாடுவதை 91,648 பார்வையாளர்கள் நேரடியாக கண்டு மகிழ்ந்தனர்.