மென்செஸ்டர் யுனைடெட் வெம்ப்லியில் நடந்த கராபோ கிண்ண (EFL cup) இறுதிப் போட்டியில் நியூகேஸில் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
2017 க்குப் பிறகு மென்செஸ்டர் யுனைடெட் வெல்லும் முதலாவது பெருந்தொடர் கிண்ணமாகும்.
போட்டியின் முதல் பாதியில் ஆறு நிமிட இடைவெளியில் இரண்டு கோல்களை போட்ட மென்செஸ்டர் யுனைடெட், தன்னை நிலை நிறுத்திக்கொண்டது.
லூக் ஷாவின் ஃப்ரீ-கிக்கை 33ஆவது நிமிடத்தில் கேஸெமிரோ கோலாக்கினார்.
39ஆவது நிமிடத்தில் ராஷ்போர்ட் இன்னொரு கோலை போட்டார்.
இது மென்செஸ்டர் யுனைடட் வெல்லும் ஆறாவது கராபோ கிண்ணமாகும்.