44 ஆண்டு தாகத்தைத் தீர்ப்பாரா ஆஷ்லே பார்ட்டி?

2 years ago
Local Sports
(874 views)
aivarree.com

ஒஸ்ட்ரேலிய டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லே பார்ட்டி, சனிக்கிழமை நடைபெறும் ஒஷ்ட்ரேலிய பகிரங்க மகளிர் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் டேனியல் காலின்ஸை எதிர்கொள்கிறார்.

44 ஆண்டுகளாக ஒஸ்ட்ரேலிய வீரர் ஒருவர் (இருபாலாரும்) ஒஷ்ட்ரேலிய பகிரங்க தொடரை வென்றதில்லை.

இறுதியாக கிறிஸ்டின் ஓ’நீல் 1978 இல் ஒற்றையர் போட்டியில் வென்றமையே கடைசி தருணமாக அமைந்தது.

இந்த தொடரில் ஒரு செட்டையேனும் இழக்காது தொடர்ந்து விளையாடி வரும் ஆஷ்லே பார்ட்டி புதிய சாதனை படைப்பார் என்று நம்பப்படுகிறது.