Tamil Sports News

2025 ரக்பி லீக் உலக கிண்ணம் ; ஹோஸ்டிங் உரிமையிலிருந்து பிரான்ஸ் விலகல்

2025 ரக்பி லீக் உலக கிண்ணம்

file photo

2025 ரக்பி லீக் உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் நடத்தாது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த போட்டியின் நிதி நம்பகத்தன்மை குறித்த கவலைகள் காரணமாக, பிரான்ஸ் திங்களன்று (15) 2025 ரக்பி லீக் உலகக் கிண்ண ஹோஸ்டிங் உரிமையிலிருந்து விலகியது.

இது தொடர்பில் தேசிய ரக்பி லீக் தலைவர் ஆண்ட்ரூ அப்டோ கூறுகையில்,

நிதி சிக்கல்களால் 2025 ரக்பி லீக் உலகக் கிண்ண ஹோஸ்டிங் உரிமையிலிருந்து பிரான்ஸ் வெளியேறியுள்ளது.

இந்நிலையில் போட்டி நடத்தும் உரிமையை அவுஸ்திரேலியா பெற முடியுமா என்பது குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம் என்றார்.

2025 ரக்பி லீக் உலகக் கிண்ணத்துக்கான ஹோஸ்டிங் உரிமையினை பிரான்ஸ் கடந்த 2022 ஜனவரியில் பெற்றது.

2021 ஆம் ஆண்டு ரக்பி லீக் உலகக் கிண்ண போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version