2023 விம்பிள்டன் ; ஜோகோவிச்சை வீழ்த்தி சம்பியனானார் அல்கராஸ்

8 months ago
Tennis
(226 views)
aivarree.com

லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை தோற்கடித்து கார்லோஸ் அல்கராஸ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

20 வயதான ஸ்பெய்ன் வீரர் பெறும் முதலாவது விம்பிள்டன் பட்டம் இதுவாகும்.

சுமார் 4 மணி நேரம் 42 நிமிடங்கள் நீடித்த போட்டியில் 1-6, 7-6(6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்றார் அல்கராஸ்.

இதனால் 7 முறை சாம்பியனும், 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.