2023 சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி ஆகஸ்ட் 15

10 months ago
Other Sports
(206 views)
aivarree.com

“2023 சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆரம்பமாகிறது.

CBL நிறுவனத்தின் உப நிறுவனமான Plenty Fodds (pvt) Limited நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பான இந் நாட்டின் பிரபல்யமான தானிய உணவான சமபோஷவின் வலுவூட்டலுடன் இப் போட்டி ஆரம்பமாகும்.

ஊவா, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் தெற்கு ஆகிய 5 மாகாணங்களை மையமாகக் கொண்டு போட்டி நடத்தப்படும்.

இதில் 70 இற்கும் மேலான போட்டி நிகழ்வுகளும் 650 இற்கும் அதிகமான பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி 18,000 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பெறும் பாடசாலைகள் மற்றும் வீரர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை