2023 உலகக் கிண்ணத்தில் வில்லியம்சன் விளையாடுவது உறுதியானது

6 months ago
Cricket
(84 views)
aivarree.com

நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கான நல்ல செய்தியாக 15 பேர் கொண்ட ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண அணியில், நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக்கில் முழங்காலில் காயம் அடைந்த வில்லியம்சன், உலகக் கிண்ண அணியில் இடம்பிடிக்க போதுமான முன்னேற்றம் அடைந்துள்ளார்.

இருப்பினும் அவர் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவதற்கு போதுமான தகுதியுடன் இல்லை என்று நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறினார்.

மேலும், கேன் வில்லியம்சன் மீண்டு வருவதற்கு உதவுவதற்கு கிடைக்கும் ஒவ்வொரு நேரத்தையும் நாங்கள் கொடுக்க விரும்புகிறோம்.

உலகக் கிண்ணம் ஒரு குறுகிய போட்டி அல்ல, முதல் போட்டிக்கு முன்னதாக அடுத்த மாதம் அவரது முன்னேற்றத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம் என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் அணியில் இல்லை என்றாலும் அவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

முழங்கால் அறுவை சிகிச்சையில் இருந்து அவர் தொடர்ந்து மீண்டு வருவதால், வில்லியம்சன் உலகக் கிண்ண தொடக்கத்திலிருந்தே நியூசிலாந்து அணியுடன் இருக்க முடியும் என்று நம்புகிறார்.

உலகக் கிண்ணத்துக்கான நியூசிலாந்து அணி செப்டம்பர் 11 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.