2023 ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் இலங்கை நான்காம் இடம்

9 months ago
Athletics
(174 views)
aivarree.com

தாய்லாந்தின் பாங்கொக்கில் அமைந்துள்ள சுபச்சலசாய் தேசிய மைதானத்தில் ஜூலை 12 முதல் 16 வரை நடைபெற்ற 2023 ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் இலங்கை மொத்தம் எடடு பதக்கங்களுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.

மூன்று தங்கம், இரண்டு சில்வர் மற்றும் மூன்று வெண்கலம் ஆகியவை இலங்கை பெற்றுக் கொண்ட பதக்கங்கள் ஆகும்.

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் நதீஷா ராமநாயக்க தங்கப் பதக்கத்தை வென்றதுடன், நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஆட்டங்கள் முடிவடைவதற்கு முன்னதாக நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 4×400 மீற்றர் ரிலே ஓட்டப் போட்டியிலும் இலங்கை தங்கம் வென்றது.

யுபுன் அபேகோன் உட்பட பல இலங்கை நட்சத்திரங்கள் பல்வேறு காரணங்களுக்காக குறித்த சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2023 ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் ஜப்பான் 37 (தங்கம் 16)பதக்கங்களுடன் முதல் இடத்தையும், சீனா 22 (தங்கம் 8) பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும், இந்தியா 27 (தங்கம் 6) பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.