164 ஓட்டங்களுடன் சுருண்டது இலங்கை அணி

1 year ago
Cricket
(321 views)
aivarree.com

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 164 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

வெலிங்டனில் நடைபெறும் இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 123 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 580 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ஓட்டங்களை பெற்றது.

இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணி, 164 ஓட்டங்களுடன் 10 விக்கட்டுகளையும் இழந்தது. 

திமுத் கருணாரத்ன 89 ஓட்டங்களைப் பெற்றார். 

மெட் ஹென்றி 44 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும், மைக்கேல் ப்ரேஸ்வெல் 50 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளையும் வீழ்த்தினர். 

இலங்கை அணி 416 ஓட்டங்கள் பின் தங்கியுள்ளது.