வீணாகிய ஹெட்ரிக் | இறுதியில் 5 சிக்சர்களை விளாசி வென்றது KKR

11 months ago
Cricket
(701 views)
aivarree.com

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடியது. 

இதில் முதலில் துடுப்பாடிய குஜராத், சாய் சுதர்சன் மற்றும் விஜய் சங்கரின் அரைசதங்களின் மூலம் 4 விக்கெட்டுக்கு 204 ஓட்டங்களை குவித்தது.  

ஹார்டிக் பாண்டியா உடல்நிலை சரியில்லாததால் இன்று விளையாடவில்லை.

அவருக்கு பதிலாக ரஷித் கான் குஜராத்தை வழிநடத்தினார்.  

சுதர்சன் 38 பந்துகளில் 53 ஓட்டங்களை எடுத்தார், விஜய் ஷங்கர் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களை எடுத்தார்.  

சுதர்சன் மற்றும் ஷங்கர் தவிர, தொடக்க வீரர் ஷுப்மான் கில் 39 ஓட்டங்களை எடுத்தார். 

KKR தரப்பில், சுனில் நரைன் 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

204 என்ற வெற்றியிலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் துடுப்பாடியது. 

மிக விறுவிறுப்பாக அமைந்த இந்த போட்டியில், 16ஆவது ஓவரில் ரசித் கான் தமது முதலாவது ஹெட்ரிக்கை பெற்றார். 

இறுதி ஓவரில் 29 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 

உமேஷ் யாதவ் ஒரு ஓட்டத்தை எடுத்து ரிங்கு சிங்கிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார்.  

அவர் யஷ் தயாள் வீசிய இறுதி ஐந்து பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விளாசினார். 

இதன் மூலம் KKR ஒரு மறக்கமுடியாத வகையில் 3 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

வெங்கடேஷ் ஐயர் 40 பந்துகளில் 83 ஓட்டங்களையும், ரின்கு சிங் 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 நான்கு ஓட்டங்களுடன் 48 ஓட்டங்களையும் பெற்றனர்.