விறுவிறுப்பான ஆட்டத்தில் 12 ஓட்டங்களால் வென்றது இந்தியா

1 year ago
Cricket
(198 views)
aivarree.com

இந்திய நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. 

இதில் முதலில் துடுப்பாடிய இந்தியா 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்றது. 

சுப்மன் கில் மிகவும் சிறப்பாக துடுப்பாடி 208 ஓட்டங்களைப் பெற்றார். 

இதன்மூலம் அவர் இந்திய அணியில் தமது நிரந்தர இடத்தை உறுதிபடுத்தியுள்ளார். 

350 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நியூசிலாந்து, ஆரம்பத்தில் விக்கட்டுகளை இழந்தது. 

எனினும் மிச்செல் ப்ராஸ்வெல் நிதானமாகவும் வேகமாவும் துடுப்பாடி 78 பந்துகளில் 140 ஓட்டங்களை குவித்தார். 

ஒருகட்டத்தில் ஆட்டம் நியூசிலாந்தின் பக்கம் திரும்பிய போதும், இறுதிகட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடினர். 

இதன்படி 49.2 ஓவர்களில் நியூசிலாந்து 337 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்விகண்டது. 

மொஹமட் சிராஜ் 46 ஓட்டங்களைக் கொடுத்த 4 விக்கட்டுகளை வீழ்த்தினார். 

ஆட்ட நாயகனாக சுப்மன் கில் தெரிவானார்.