விராட் கோலியை சமாளிப்பது கடினம் | பாகிஸ்தான் உபத்தலைவர்

8 months ago
Cricket
(252 views)
aivarree.com

இந்திய கிரிக்கட் அணியின் வீரர் விராட் கோலியை சமாளிப்பது கடினமான விடயம் என்று பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் உபத்தலைவர் சஹாப் கான் தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் கூறியவை.

விராட் கோலி ஒரு உலகத்தரம் வாய்ந்தவீரர்.

அவரை சமாளிப்பது என்பது மிகவும் கடினமானது.

அதற்காக பாகிஸ்தான் பல்வேறு திட்டங்களை வகுக்க வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 20க்கு20 உலகக்கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் அவரது திறமைக்கு சான்று.

அவ்வாறான ஒரு வீரரை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமானது.

ஆனால் கிரிக்கட் என்பது மனநிலை விளையாட்டை மையப்படுத்தியது.

அந்தந்த சூழ்நிலைகளைப் பொறுத்து நிலைமை மாற்றமடையும்.