வலைபந்து உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி | தர்ஜனி சிவலிங்கம் பங்கேற்பதில் உறுதியில்லை

2 years ago
Athletics
(505 views)
aivarree.com

எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்கேற்கும் 12 பேர் கொண்ட இலங்கை அணியை இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கம் பெயரிட்டுள்ளது.

வலைப்பந்து சம்மேளனம் முன்னதாக உலகக் கிண்ணத்திற்கான பூர்வாங்க அணியை அறிவித்திருந்ததுடன், அந்த அணி, தேசிய வலைப்பந்து பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாச மற்றும் என். பிரசாதியின் கீழ் அடிப்படைப் பயிற்சி பெற்றார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் விக்டோரியா பிரீமியர் லீக் போட்டியில் விளையாடி வரும் இலங்கை வீராங்கனை தர்ஜனி சிவலிங்கம் பங்கேற்பது சற்று கேள்விக்குறியாகி உள்ளதாகவும், அவர் அணியில் சேர முடியாத பட்சத்தில் இமேஷா பெரேரா அணியில் இணைய உள்ளதாகவும் வலைப்பந்து சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வலைப்பந்தாட்ட தெரிவுக்குழுவினால் இந்த அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், தமயந்தி ஜயதிலக்க தலைமையிலான இந்த தெரிவுக்குழுவில் திசங்கி கொடிதுவுக்கு மற்றும் சாமிக்கா ஜயசேகர ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

முன்னதாக பெயரிடப்பட்ட 16 பேர் கொண்ட குழாமில் இருந்த இமேஷா பெரேரா, ருக்ஷலா ஹப்புஆராச்சி, சாமுதி விக்ரமரத்ன, தருஷி நவோத்யா ஆகிய வீரர்கள் இறுதி அணியில் இடம்பெறவில்லை.

உறுதி செய்யப்பட்ட அணி:

திஷாலா அல்கம, செமினி அல்விஸ், கயாஞ்சலி அமரவன்ச, ரஷ்மி திவ்யாஞ்சலி, துலங்கி வன்னிதிலக, மல்மி ஹெட்டியாராச்சி, கயானி திஸாநாயக்க, சதுரங்கி ஜயசூரிய, காயத்ரி கௌசல்யா, தர்ஜனி சிவலிங்கம், பாஷினி யோஷித டி சில்வா, ஷானிகா பெரேரா.

மேலதிக வீரர்கள்: இமேஷா பெரேரா, ருக்ஷலா ஹப்புஆராச்சி, சாமுதி விக்ரமரத்ன, தருஷி நவோத்யா பெரேரா.