தென் கொரியாவின் யெச்சியோனில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான 20 வயதுக்குட்பட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 4×400 மீற்றர் ரிலே கலப்பு ஓட்ட பந்தயத்தில் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றது.
இப்போட்டியில் இலங்கை அணி 3 நிமிடம் 25.41 செக்கனில் பந்தய தூரத்தைக் கடந்தது.
இலங்கைக்கு இன்று கிடைத்த இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
முன்னதாக பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.