ராஜஸ்தான் அணியில் சங்காவுக்கு இரட்டை வேடம்

1 year ago
Cricket
(365 views)
aivarree.com

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் கிரிக்கெட் பணிப்பாளர் மற்றும் தலைமை பயிற்சியாளர் என இரட்டை வேடத்தில் குமார் சங்கக்கார தொடர்ந்து பணியாற்றுவார்.

அவருக்கு டிரெவர் பென்னி உறுதுணையாக நிற்பார் என்று அணி நிர்வாகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

சக இலங்கை வீரர் லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராகவும், ஜூபின் பருச்சா போட்டி வியூகம், மேம்பாடு மற்றும் செயல்திறன் பணிப்பாளராகவும் இருப்பார்.

கில்ஸ் லிண்ட்சே பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பத்தின் தலைவராகவும், சித்தார்த்த லஹிரி துணை பயிற்சியாளராகவும், திஷாந்த் யாக்னிக் களத்தடுப்பு பயிற்சியாளராகவும் இருப்பார்.

2023 ஐ.பி.எல். லில் ராஜஸ்தான் தனது முதல் போட்டியில் ஏப்ரல் 2 ஆம் திகதி ஹைதராபாத்தில், சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.