யாழில் நடைபெற்ற பாடசாலை மட்ட தேசிய கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டிகள்

2 months ago
Other Sports
(126 views)
aivarree.com

பாடசாலைமட்ட தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டிகள் நேற்று (09) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

இந்த போட்டிகள் 17 மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான போட்டியாக இடம்பெற்றிருந்தது.

இதில் 20 வயதுக்குற்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தினை கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியும், இரண்டாம் இடத்தினை கொழும்பு சென் பீற்றர் கல்லூரியும், மூன்றாம் இடத்தினை மொறட்டுவை சென் தோமஸ் கல்லூரியும் பெற்றுக்கொண்டன.

17 வயதுக்குற்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தினை மொறட்டுவை Prince of Vales கல்லூரியும், இரண்டாம் இடத்தினை கொழும்பு றோயல் கல்லூரியும், மூன்றாம் இடத்தினை கண்டி Trinity கல்லூரியும் பெற்றுக்கொண்டன.

நேற்று (09) நடைபெற்ற 20 வயதுக்குற்பட்ட பெண்களுக்கான போட்டியில் முதலாம் இடத்தினை கண்டி Mahamaya Girls கல்லூரியும், இரண்டாம் இடம் கொழும்பு Holy Family Convent , மூன்றாம் இடம் Good Shepherd Convent பெற்றுக்கொண்டன.

நேற்று முன்தினம் (08) நடைபெற்ற 17 வயதுக்குற்பட்ட பெண்கள் போட்டியில் முதலாம் இடம் Nugegoda St. Joseph’s Girls School, இரண்டாம் இடம் Motatuwa Our Lady Of Victories Convent, மூன்றாம் இடம் கொழும்பு Holy Family Convent ஆகியன பெற்றுக்கொண்டன.