மீண்டும் தோற்றது கட்டார் | வரலாற்றிலும் இடம்பிடிப்பு

1 year ago
Local Sports
(905 views)
aivarree.com

ஸ்னேகல் அணியுடனான போட்டியில் கட்டார் தோல்வியுற்றதன் மூலம், உலகக்கிண்ண தொடரை நடத்தி 2 குழுநிலை போட்டிகளில் தோல்வியுற்ற முதல் அணியாக பதிவானது.

ஏற்கனவே உலகக்கிண்ணத் தொடரை நடத்தி முதலாவது போட்டியிலேயே தோல்வியுற்ற நாடாகவும் கட்டார் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

மேலும் தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கும் கட்டார் தள்ளப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் 3க்கு1 என்ற கோல் கணக்கில் ஸ்னேகல் வெற்றிபெற்றமையானது, உலகக் கிண்ண போட்டியொன்றில் 3 கோல்களைப் பெற்ற இரண்டாவது சந்தர்ப்பமாகவும், ஸ்னேகல் ஒரு கோலுக்கும் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் முதலாவது உலகக்கிண்ண போட்டியாகவும் அமைந்துள்ளது.

ஸ்னேகல் இந்த தொடரில் பெறுகின்ற முதலாவது வெற்றி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.