இடது காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
அவர் தற்போது சிறந்த உடல்நிலையுடன் உள்ளதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனவே அவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இந்திய ஒருநாள் கிரிக்கட் அணித் தலைவர் ரோஹித் சர்மா பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கட் தொடர் எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதில் இந்திய அணியின் சகலத்துறை ஆட்டக்காரர் ஹார்த்திக் பாண்டியாவும் இணைத்துக் கொள்ளப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.