உலகின் தலை சிறந்த டென்னிஸ் வீரர்களில் ஒருவரான நோவக் ஜோகோவிச், அடுத்த வாரம் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரினை தவற விட்டுள்ளார்.
கொவிட்-19க்கு எதிராகத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தினால் அவருக்கு அமெரிக்காவுக்கு நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே மியாமி ஓபனை ஜோகோவிச் தவறவிட்டுள்ளதாகப் போட்டி பணிப்பாளர் ஜேம்ஸ் பிளேக் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
இதே காரணத்திற்காக 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஜோகோவிச், நடந்து வரும் இந்தியன் வெல்ஸ் போட்டியிலிருந்தும் விலகினார்.
மியாமி ஓபன் எதிர்வரும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை மியாமியின் ஹார்ட் ரோக் அரங்கில் நடைபெறவுள்ளது.