மழையால் கைவிடப்பட்டது இலங்கை ஆஃப்கான் போட்டி

1 year ago
Local Sports
(879 views)
aivarree.com

இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 

பல்லேகலேயில் நடந்த இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய ஆஃப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் 228 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது. 

ரஹ்மானுல்லா குர்பாஸ் 68, ரஹ்மத் ஷா 58 என ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றனர். 

இலங்கை சார்பில் கசுன் ராஜித 3 விக்கட்டுகளை 31 ஓட்டங்களுக்கு வீழ்த்தினார். 

ESPN

தொடர்ந்து இலங்கை அணி 2.4 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 10 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிகையில் மழை விடாது பெய்தது. 

இதனால் போட்டி கைவிடப்பட்டது. 

தொடரில் 1க்கு 0 என ஆப்கானிஸ்தான் முன்னிலையில் உள்ளது. 

ESPN