மலையகத்தில் மரதன் ஓட்டப் போட்டி!

1 year ago
Athletics
(453 views)
aivarree.com

மலையக மக்களின் 200 வருட வரலாற்றை நினைவுகூர்ந்து மலையக இளைஞர்களுக்கான மரதன் ஓட்டப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி காலை 8 மணிக்கு தலவாக்கலை தொடக்கம் ஹட்டன் வரை இடம்பெறவுள்ளது.

18 – 35 வயதிற்கும் இடைப்பட்ட ஆண்கள் இந்த மரதன் ஓட்டப் போட்டியில் பங்குபற்றலாம்.

உரிய மருத்துவ தகுதிச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை, கிராம சேவகர் உறுதி ஆகிய பிரதிகளை இணைத்து முழுப் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பவற்றை தெளிவாக குறிப்பிட்டு சுயமாக தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனுப்ப வேண்டிய முகவரி –

மலையகம் 200=20Km
மரதன் ஓட்டப் போட்டி
இல,96
திம்புள்ள வீதி
ஹட்டன்.

விண்ணப்பங்களை 2023 செப்டம்பர் 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைக்கவும். பிந்திக் கிடைக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

பரிசு விபரம்

  • 1ம் பரிசு – 50,000 ரூபா பணம் – கேடயம், தங்கப் பதக்கம், சான்றிதழ்
  • 2ம் பரிசு – 30,000 ரூபா பணம் – கேடயம், வெள்ளிப் பதக்கம், சான்றிதழ்
  • 3ம் பரிசு – 20,000 ரூபா பணம் – கேடயம், வெண்கலப் பதக்கம், சான்றிதழ்
  • 4 தொடக்கம் 10 வரையான வெற்றியாளர்களுக்கு ஆறுதல் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டியில் பங்குபற்றி 20 கிலோ மீட்டர் தூரத்தை ஓடி முடிக்கும் ஏனைய அனைத்து போட்டியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 077 1485577, 076 6928419 என்ற தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளலாம்.