மரியதாஸ் மேரி றெஜினா ஞாபகார்த்தமாக நடைபெற்ற காற்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று, கிண்ணத்தை தனதாக்கியது.
பொற்பதி சமூக சேவை ஒன்றியத்தின் ஊடாக பருத்தித்துறை லீக் அனுமதியுடன் பொற்பதி சென் பீற்றர் விளையாட்டுக் கழகம் நடத்திய காற்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று பிற்பகல் பொற்பதி சென் பீற்றர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
ஆட்டத்தில் சென் சேவியர் அணி ஒரு கோலை போட்டு வெற்றியை தனதாக்கியது.
இதேவேளை நீண்ட தூர ஓட்டம், முட்டியுடைத்தல், கிடுகு பின்னுதல், கயிறிழுத்தல் போன்ற விளையாட்டுக்களும் நேற்று காலை முதல் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், மருதங்கேணி கோட்ட கல்வி அதிகாரி சிறிராமசந்திரன், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.