மரடோனாவை விட சிறந்த வீரர் மெஸ்ஸிதான் | ஆர்ஜன்டீன பயிற்றுவிப்பாளர் 

1 year ago
Football
(295 views)
aivarree.com

உலகக் கிண்ணத்தை வென்ற அர்ஜென்டினாவின் பயிற்சியாளர் லியோனல் ஸ்காலோனி, டியாகோ மரடோனாவை மிஞ்சிய சிறந்த வீரர் லியோனல் மெஸ்ஸியே என்று தெரிவித்துள்ளார்.

“மெஸ்ஸியா, மரடோனாவா? என்றால் நான் மெஸ்ஸியை தேர்ந்தெடுப்பேன், அவரிடம் ஏதோவொரு சிறப்பு அம்சம் இருக்கிறது. மரடோனாவும் சிறந்தவராக இருந்தாலும்,  மெஸ்ஸி எல்லா காலத்திலும் சிறந்தவர் (GOAT – Greats of all time),” என்று ஸ்பானிய வானொலி நிலையமான கோப்பிடம் ஸ்கலோனி கூறியுள்ளார்.

அர்ஜென் ரசிகர்கள் நீண்ட காலமாக மெஸ்ஸியை விட மரடோனாவையே விரும்பிவருகிறார்கள்.

ஆனால் 1986 இல் மரடோனா உலகக் கிண்ணத்தை வென்றதற்குப் பிறகு முதல் முறையாக மெஸ்ஸி தலைமையில் ஆர்ஜண்டீனா கடந்த மாதம் உலகக் கிண்ணத்தை வென்றது. 

இதனை அடுத்து இரசிகர்களின் அணுகுமுறை மாறி வருவதாக கூறப்படுகிறது. 

2018 ஆம் ஆண்டில் அர்ஜெண்டினாவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, ​​​​ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணத்தை தொடர்ந்து மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்திருந்த வேளையில், ​​​​மெஸ்ஸியுடன் கலந்துரையாட தாம் அதிக முன்னுரிமை அளித்ததாகவும் ஸ்காலோனி கூறியுள்ளார்.

 “நாங்கள் செய்த முதல் விடயம் மெஸ்ஸியுடன் வீடியோ கோல் செய்ததே.  அவர் மரியாதைக்குரியவர், நாங்கள் அவரிடம் முதலில் சொன்னது ‘திரும்பி வாருங்கள்.  நாங்கள் உங்களுக்காக காத்திருப்போம்’ என தெரிவித்த ஸ்காலொனி, எட்டு மாதங்களுக்குப் பிறகு மெஸ்ஸி மீண்டும் போட்டிகளுக்குத் திரும்பி நம்பமுடியாத அணியை கட்டியெழுப்பினார்” என்று தெரிவித்துள்ளார். 

“மெஸ்ஸிக்கு பயிற்சியளிப்பது கடினமானது அல்ல. அவரை தொழில்நுட்ப மட்டத்தில் சரிசெய்ய முடியாது, ஆனால் சில நேரங்களில் அவரை குறிப்பிட்ட வழிகளில் செயற்படுமாறு அறிவுறுத்தலாம். அவர் சரியான இடத்தை அடையாளம் கண்டதன் பின்னர் அவரே முதன்மையானவராக இருப்பார்” எனவும் பயிற்றுவிப்பாளர் ஸ்காலொனி தெரிவித்துள்ளார்.