ப்ரெண்டன் டெய்லருக்கு தடை

2 years ago
Local Sports
(923 views)
aivarree.com

போதைப்பொருள் பாவனை மற்றும் ஆட்ட நிர்ணய சதி அணுகுமுறை தொடர்பான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சிம்பாப்வே கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் பிரெண்டன் டெய்லருக்கு மூன்றரை ஆண்டுகள் கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெய்லர், இந்திய வர்த்தகர் ஒருவர் தாம் கோகோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட காணொளியைக் காண்பித்துஇ ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுமாறு தம்மை மிரட்டியதாக ஐ.சி.சியில் முறையிட்டிருந்தார்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு எதிராக சிம்பாப்வே விளையாடவிருந்த போட்டிகள்; சில பகுதிகளைப் பாதிக்க தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக டெய்லர் கூறினார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) விதிகளின்படிஇ இவ்வாறான எந்தவொரு அணுகுமுறையையும் தாமதமின்றி வீரர்கள் தெரிவிக்க வேண்டும் என்ற போதும் அவர் 5 மாதங்கள் தாமதித்தமையாலேயே அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரண்டன் சிம்பாப்வே அணிக்காக 17 ஆண்டுகளாக விளையாடியுள்ளார்.