போர்ச்சுகல் – உருகுவே போட்டி நடுவே மைதானத்துக்குள் கொடியுடன் ஓடிய நபர் 

1 year ago
Local Sports
(959 views)
aivarree.com

திங்கட்கிழமை நடந்த கட்டார் உலகக் கிண்ண போட்டியின் போது வானவில் வர்ண கொடியை ஏந்தி, பின்னால் “ஈரான் பெண்களுக்கு மரியாதை கொடு” என்ற வாசகத்துடனான டி-சேர்ட்டை அணிந்த ஒருவர் மைதானத்துக்குள் பிரவேசித்தார்

போர்ச்சுகலுக்கும் உருகுவேக்கும் இடையிலான ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் சுமார் 30 வினாடிகள் அந்த நபர் களத்தில் இருந்தார். 

அவரை பாதுகாப்பு தரப்பினர் சமாளித்து அழைத்துச் சென்றனர்.  

அவரது டி-சேர்ட்டின் முன்புறத்தில் “உக்ரைனைக் காப்பாற்று” என்ற வாசகமும் இருந்தது.

முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கான கட்டாயத்தை நீக்குதல் உள்ளிட்ட விடயங்களுக்காக ஈரானில் பெண்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவரது செயற்பாடு அமைந்துள்ளது.