பெய்ஜிங் ஒலிம்பிக் – அனுமதிச் சீட்டு இல்லை

2 years ago
Local Sports
(934 views)
aivarree.com

பெய்ஜிங்கில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பொது மக்களுக்கு அனுமதிச் சீட்டு விற்கும் திட்டங்களை அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.


பெப்ரவரி 4 முதல் 20 வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளுக்கு அழைக்கப்பட்ட ‘பார்வையாளர்களின் குழுக்களுக்கு’ மட்டுமே அனுமதிச் சீட்டுகள் விநியோகிக்கப்படும்.


ஜனவரி 16 அன்று சீனாவில் 223 புதிய கோவிட்-19 தொற்றாளர்கள் பதிவாகியதால், அமைப்பாளர்கள் ஒலிம்பிக் தொடர்பான திட்டங்களை மாற்றியுள்ளனர்.


உத்தியோக பூர்வ நிறுவனங்கள் மூலம் பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் கடுமையான கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.