பிரெஞ்சு ஓபனிலிருந்து நடால் விலகல்

9 months ago
Tennis
(354 views)
aivarree.com

ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

தனது இடது இடுப்பு காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்டதன் விளைவாக அவர் இந்த முடிவினை அறிவித்துள்ளார்.

36 வயதான ஸ்பெயின் வீரர், 2024 சீசனுக்குப் பிறகு ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.

ஜனவரி மாதம் அவுஸ்திரேலிய ஓபனில் காயம் அடைந்ததிலிருந்து அவர் விளையாடவில்லை.

ரோலண்ட் கரோஸில் 14 முறை ஆடவர் ஒற்றையர் சாம்பியனான நடால், சமீபத்திய வாரங்களில் பயிற்சி செய்து வருகிறார், ஆனால் போட்டித்தன்மையுடன் விளையாடுவதற்கு போதுமான உடற் தகுதியினை அவர் இன்னும் எட்டவில்லை.

நடாலுக்கான அண்மைய அறுவை சிகிச்சையின் முடிவுகள் சனிக்கிழமை (3) காலை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 19 ஆண்டுகளில் முதன்முறையாக பிரெஞ்ச் ஓபனை தவறவிடுவதை உறுதி செய்த நடால், அடுத்த ஆண்டு தனது பிரியாவிடை சீசனில் உடல் ரீதியாக சிறந்த நிலையில் தன்னை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறினார்.

22 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்ற நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் இணைந்து ஆடவருக்கான முக்கிய வெற்றிகளின் கூட்டு சாதனை எண்ணிக்கையை வைத்துள்ளார்.

கடந்த மே 22 ஆம் திகதி ஆரம்பமாகிய 2023 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரானது எதிர்வரும் ஜூன் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.