பாகிஸ்தான் – நியூஸிலாந்து தொடர் : திகதியில் மாற்றம்

1 year ago
Cricket
(277 views)
aivarree.com

ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்ட பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான திகதிகளில் மாற்றம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவினை இரு நாட்டு கிரிக்கெட் நிர்வாகங்களும் இணைந்து எடுத்துள்ளன.

இரு அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் முதலில் ஏப்ரல் 13 – 23 வரை விளையாட திட்டமிடப்பட்டது.

எனினும் தற்சமயம் முதல் டி-20 போட்டியினை ஏப்ரல் 14 ஆம் திகதியும், இறுதி டி-20 போட்டியினை ஏப்ரல் 24 நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் டி-20 போட்டிகளில் முறையே ஏப்ரல் 15, 17 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெறும்.

இதேவ‍ேளை சுற்றுப் பயணத்தின் ஒருநாள் போட்டிக்கான அட்டவணையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் தொடர் திட்டமிட்டபடி ஏப்ரல் 26 ஆம் திகதி ஆரம்பமாகி, மே 7 ஆம் திகதி முடிவடையும், ஆனால் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் ஒருநாள் போட்டிகளை முறையே ஏப்ரல் 30, மே 3 மற்றும் 5 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரானது ஐ.சி.சி. உலகக் கிண்ண சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாக அமையாது, எனினும் அதற்கான ஆயத்தத்துக்கு உதவும்.