பாகிஸ்தான் – இந்திய முறுகல் | பாகிஸ்தான் கிரிக்கட் சபைத் தலைவர் வழங்கிய அப்டேட்

1 year ago
Cricket
(205 views)
aivarree.com

பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது.

இதனை புறக்கணிக்கவிருப்பதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா, இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் புதிய தலைவர் நஜம் சேதி, இந்தி விடயம் குறித்து எதிர்வரும் பெப்வரி மாதம் 4ம் திகதி ஆசிய கிரிக்கட் பேரவையுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.

‘பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அழைத்து போட்டிகளை நடத்த இந்தியா தயாராக இருக்கின்ற போதும், இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப தயாராக இல்லை. இது எங்களுக்கு புதிய விடயம் இல்லை. இருந்தாலும் ஆசிய கிரிக்கட் பேரவை அதிகாரிகளை சந்தித்து, பாகிஸ்தானுக்கு நன்மையான ஒரு தீர்மானம் எடுக்கப்படும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.