அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் நுவான் துஷாரவுக்கு கொரோனா தொற்று உறுதியானது – (ஸ்ரீலங்கா கிரிக்கட்)
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் டில்ஷான் பொன்சேகாவுக்கும் கொவிட்-19 தொற்று உறுதியானது.
உயிர் குமிழி முறையில் உள்ள இலங்கை குழாம் மற்றும் பணியாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்கள் இருவரும் அடையாளம் காணப்பட்டனர்.
சுகாதார நடவடிக்கைகளில் பின், அவர்கள் இருவரும் எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் மீண்டும் அணியுடன் இணைவார்கள்
இலங்கை கிரிக்கட் அணி எதிர்வரும் 3ம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.