நியூசிலாந்தை 3:0 என வெள்ளையடித்தது இந்தியா

1 year ago
Cricket
(189 views)
aivarree.com

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான  ஒருநாள் கிரிக்கட் தொடரை இந்திய அணி 3:0 என்ற கணக்கில் வென்றது. 

தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. 

இதில் நாணய சுழற்சியில் வெற்ற நியூசிலாந்து களத்தடுப்பை தெரிவு செய்ய, முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 385 ஓட்டங்களைப் பெற்றது. 

சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ஓட்டங்களைப் பெற்றதுடன் இது அவர் இந்த தொடரில் பெறும் இரண்டாவது சதமாகும். 

அணித்தலைவர் ரோஹித் சர்மா 85 பந்துகளில் 101 ஓட்டங்களைப் பெற்றார். 

இதன்மூலம் 28 ஒருநாள் சதங்களைப் பெற்று, ஆரம்ப துடுப்பாட்டக்காரராக வந்து அதிக சதங்களை அடித்த வீரர் என்ற சனத் ஜெயசூரியவின் சாதனையை சர்மா சமன் செய்தார். 

பந்துவீச்சில் நியூசிலாந்தின் ஜெக்கொப் டஃபி மற்றும் ப்லேயர் டிக்னர் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்கள். 

386 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய நியூசியாந்து அணி, 41.2 ஓவர்களில் 295 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் 90 ஓட்டங்களால் தோல்வி கண்டது. 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவொன் கொன்வே 100 பந்துகளில் 138 ஓட்டங்களை பெற்றார். 

சர்துல் தக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்கள். 

ஆட்ட நாயகனாக சர்துல் தக்கூர் தெரிவானார்.