நியூசிலாந்து தொடரிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகல்

1 year ago
Cricket
(225 views)
aivarree.com

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார்.

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ஷ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாளை ஜனவரி 18 ஆம் திகதி ஹைதராபாத்தில் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட ஒருநாள் அணி:
ரோஹித் சர்மா (தலைவர்), ஷுப்மன் கில், இஷான் கிஷன் (வி.கா), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத் (வி.கா), ஹார்டிக் பாண்டியா (துணை தலைவர்), ரஜத் படிதார், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அஹமட், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர ச்சாஹல், குல்தீப் யாதவ், மொஹமட் ஷமி, மொஹமட் சிராஜ், உம்ரான் மாலிக்.