நான்காவது முறையாகவும் கிண்ணம் வென்று சாதித்த தென்னாப்பிரிக்கா

11 months ago
Other Sports
(388 views)
aivarree.com

உலகக்கிண்ண ரக்பி தொடரின் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, நியூசிலாந்துடன் மோதியது.

ஸ்டேட் டி ஃப்ரான்ஸில் நடைபெற்ற இந்த போட்டி மிகக் கடுமையான ஒன்றாக நடைபெற்றிருந்தது.

எவ்வாறாயினும் போட்டியில் 12க்கு11 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவின் ஹண்ட்ரே போலார்ட் அடித்த 4 தண்ட உதைகள் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு பேருதவியாக அமைந்தன.

சனிக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியின் வெற்றி மூலம், தென்னாப்பிரிக்கா 4 தடவைகள் ரக்பி உலகக்கிண்ணத் தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.

இதற்கு முன்னர் 1995, 2007 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கான உலகக்கிண்ணத் தொடர்களில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது.

இந்த போட்டியின் முதல்பாதியிலேயே நியூசிலாந்து அணி தமது தலைவர் சாக் கேன் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டதால் இழந்தது.

அதேபோல போட்டியின் இரண்டாவது நிமிடத்திலேயே ஷெனொன் ஃப்ரிசெல் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டார்.

அணியின் முக்கிய வீரரான பொக் ஹுக்கர் காயத்தினால் வெளியேறினார்.

இந்த நிலையில் இறுதி 50 நிமிடங்களை நியூசிலாந்து 14 வீரர்களுடன் விளையாடியது.