நடால் சாதனையின் இறுதி படியில்

2 years ago
Local Sports
(927 views)
aivarree.com

ஒஸ்ட்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் இத்தாலியின் மேட்டியோ பெர்ரெட்டினியை வீழ்த்தி ரஃபாயல் நடால் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

ஏழாவது நிலை வீரரான பெரெட்டினியை நடால் 6-3 6-2 3-6 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

35 வயதான ஸ்பெயின் வீரரான நடால், முன்னிலை வீரர்களான நோவக் ஜோகோவிச் மற்றும் ரோஜர் பெடரருடன் 20 பெரும் பட்டங்களை(க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை) வென்று சமநிலையில் உள்ளார்.

இந்த தொடரின் இறுதி போட்டியில் வென்றால் நடால் அதிக க்ராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவராக சாதனை படைப்பார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்திய டேனியல் மெத்வதேவ் உடன் நடால் விளையாடுகிறார்.