உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்ற இந்த போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறுகிறது.
இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, இன்றைய போட்டியில் சரியாக சோபிக்கத் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதனை அடுத்து அணியின் ஓட்ட வேகம் படிப்படியாக குறைந்துச் சென்றது.
அணிக்கு நம்பிக்கை சேர்த்த விராட் கோலி 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதன்படி இந்திய அணி 50 ஓவர்களில் 240 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 241 ஓட்டங்களைப் பெற வேண்டும்.
இந்த தொடரின் கடந்த போட்டிகளுடன் ஒப்பிடும் போது, இந்த வெற்றி இலக்கு அவுஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்காது என்று கருதப்படுகிறது.