துப்பாக்கி சூட்டில் பனாமா கால்பந்து வீரர் பலி

3 months ago
Football
(146 views)
aivarree.com

பனாமா தேசிய கால்பந்து அணியின் வீரர் ஒருவர் கொலோன் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குறித்த நகரில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் வைத்தே 26 வயதான கில்பர்டோ ஹெர்னாண்டஸ் என்ற வீரர் மீது துப்பாக்கி ஏந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் ஹெர்னாண்டஸ் உயிரிழந்ததுடன் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர்.

கடந்த மாதங்களில் கொலோனில் நகரில் கொலைகள் அதிகரித்துள்ளன.

40,000 மக்கள் வசிக்கும் கொலோன் நகரில் இந்த ஆண்டு இதுவரை 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கில்பர்டோ ஹெர்னாண்டஸ் இந்த ஆண்டு மார்ச் மாதம் குவாத்தமாலாவுக்கு எதிரான போட்டியில் பனாமா தேசிய அணியில் அறிமுகமானார்.

இந்நிலையில் பனாமாவின் கால்பந்து சம்மேளனம், கில்பர்டோ ஹெர்னாண்டஸுக்கும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.