தில்ருவான் பெரேரா ஓய்வு பெறுகிறார்

3 years ago
Local Sports
(1172 views)
aivarree.com

இலங்கை அணியின் சகலதுறை வீரர் தில்ருவன் பெரேரா சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார்.


39 வயதான தில்ருவன் பெரேரா, 43 டெஸ்ட் போட்டிகளில், ஆயிரத்து 303 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 161 விக்கட்டுக்களை வீழத்தியுள்ளார்.

அத்துடன், 13 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில், 152 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், 13 விக்கட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.

அதேநேரம், மூன்று 20 க்கு 20 போட்டிகளில், 3 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.