தனுஷ்க குணதிலக்கவுக்காக 150,000 டொலர்களை வழங்கிய பெண்

2 years ago
Local Sports
(2623 views)
aivarree.com

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் அவுஸ்திரேலியாவில் கைதான தனுஷ்க குணதிலக்கவுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது.

இதற்காக அவர் நீதிமன்றில் செலுத்த வேண்டிய 150,000 டொலர்களை, அங்கு வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் வழங்கியுள்ளார்.

அவரது அடையாளம் வெளிப்படுத்தப்படவில்லை.

அதேநேரம் தனுஷ்க தென்மேற்கு சிட்னியில் தங்குவதற்கான ஒழுங்குகளையும் அங்குள்ள இலங்கையர்கள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

ஆரம்பத்தில் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்தப் போதும், 38,000 டொலர்கள் கட்டணம் பெற்று வாதிட்ட தமிழ் சட்டத்தரணி ஒருவர் அவருக்கு பிணை பெற்றுக்கொடுத்தார்.

இதுகுறித்த விளக்க காணொளி கீழே.