தடகளத் தலைவரை இடைநீக்கம் செய்த சோமாலியா

9 months ago
Athletics
(155 views)
aivarree.com

சோமாலிய அரசாங்கம் அதன் தடகளத் தலைவரை இடைநீக்கம் செய்துள்ளது.

சோமாலிய தடகள வீராங்கனை ஒருவர் சர்வதேசப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை முடிக்க கிட்டத்தட்ட 22 வினாடிகள் எடுத்தார்.

முறையான பயிற்சி பெறத குறி்த்த வீராங்கனை தொடர்பான காணொளி வைரலானதை அடுத்து, சோமாலியாவின் தடகள தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

20 வயதான நஸ்ரா அபுகார் அலி, செவ்வாயன்று சீனாவின் செங்டுவில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் கடைசி இடம் பிடித்தார்.

வெற்றியாளரான பிரேசிலின் கேப்ரியேலா மௌராவோவை விட இது இரண்டு மடங்கு அதிக நேரமாகும்.