ட்ரம்புடன் கோல்ஃப் விளையாடிய தோனி

7 months ago
Cricket
(134 views)
aivarree.com

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனியும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் நட்புரீதியா ஒன்றாக கோல்ஃப் விளையாடியுள்ளனர்.

டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டெனால்ட் ட்ரம்ப் மற்றும் தோனி ஒன்றாக இருக்கும் படத்தினை தோனியின் தொழிலதிபர் நண்பர் ஹிதேஷ் சங்வி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

அந்த படத்தில் ட்ரம்ப் மற்றும் தோனி ஆகிய இருவரும் கோல்ஃப் உடையில் இருப்பதை காணலாம்.

தோனி தற்சமயம் விடுமுறைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அல்கார்ஸ் – அலெக்ஸெண்டர் ஸ்வெரெவ் இடையிலான காலிறுதிப் போட்டியினை பார்வையாளர்களுடன் அமர்ந்து தோனி கண்டு ரசித்த ஒருநாள் கழித்து இந்த சந்திப்பு வந்துள்ளது.

கிரிக்கெட் களத்தில் அமைதியான நடத்தைக்காக அறியப்பட்ட தோனி மற்றும் அமெரிக்க அரசியலில் குழப்பகரமான நபராக இருந்த ட்ரம்ப் ஆகியோரின் எதிர்பாராத இந்த சந்திப்பு சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.