டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அஷ்வின் முதலிடம்

1 year ago
Cricket
(306 views)
aivarree.com

ஐ.சி.சி. டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனை பின்னால் தள்ளி அவர் இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

போர்டர்-கவாஸ்கர் தொடரில் மொத்தம் 25 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், 869 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆண்டர்சன் 10 ரேட்டிங் புள்ளிகள் பின்தங்கி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலியும் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் பெற்றுள்ளார்.

மொத்தமாக ஏழு இடங்கள் முன்னேறிய அவர் தரவரிசையில் 13 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.