ஓய்வினை அறிவித்தார் டிம் பெய்ன்

1 year ago
Cricket
(369 views)
aivarree.com

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் டிம் பெய்ன் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ஹோபோர்ட்டில் உள்ள பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் குயின்ஸ்லாந்துக்கு எதிரான டாஸ்மேனியாவின் போட்டியின் முடிவிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

38 வயதான பெய்ன், தனது இறுதிப் போட்டியில் விளையாடுவதாக எந்தப் பகிரங்க அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆனால் குயின்ஸ்லாந்திற்கு எதிரான மோதலே தனது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று டாஸ்மேனியா அணிக்குத் தெரிவித்திருந்தார்.

விக்கெட் காப்பாளரான பெய்ன் 2018 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் 2021 ஆம் ஆண்டு வரை 21 டெஸ்ட் போட்டிகளில் தலைவராகச் செயற்பட்டு அவுஸ்திரேலிய அணியை வழிநடத்தியுள்ளார்.

டிம் பெய்ன் அவுஸ்திரேலிய அணிக்காக 35 டெஸ்ட், 35 ஒருநாள் மற்றும் 12 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.