நியூயோர்க்கில் நடந்த யுஎஸ் ஓபன் இறுதிப் போட்டியில் டேனியல் மெட்வடேவை வீழ்த்தி 24வது கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை நொவெக் ஜோகோவிச் வென்று சாதனை படைத்தார்.
36 வயதான செர்பிய வீரர் ஜொக்கோவிச், 6-3 7-6 (7-5) 6-3 என்ற கணக்கில் வென்றார்.
இதன் மூலம் ஜோகோவிச் மார்கரெட் கோர்ட்டின் 50 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளார்.
“இந்த விளையாட்டில் மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிட வேண்டும், என்ற எனது குழந்தை பருவ கனவை நான் உண்மையில் அடைந்திருக்கிறேன்” என்று போட்டியின் பின்னர் ஜொக்கோவிச் கூறினார்.
அது அவர் வெல்லும் நான்காவது யுஎஸ் ஓபன் பட்டமாகும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஃபேல் நடாலை 22 பெரிய பட்டங்களை வென்று ஜோகோவிச் கடந்தார்.
ஜொக்கோவிச் 2023 இல் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களில் மூன்றை வென்றுள்ளார்.
நான்கு முறை இந்த சாதனையை எட்டிய முதல் மனிதர் ஜொகோவிச் ஆவார்.
இப்போது புதிய உலகின் முதல் நிலை வீரரான ஜொக்கோவிச் ஜனவரியில் அவுஸ்திரேலிய ஓபனில் கோர்ட்டை மிஞ்சும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
அவர் ஏற்கனவே 10 அவுஸ்திரேலிய ஓபன் பட்டங்களை வென்றுள்ளார்.