2018ல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் சிறப்பாக துடுப்பாடிய சுப்மன் கில் மீது இந்திய கிரிக்கெட் பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.
பஞ்சாப் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான அவர், இதுவரை ஏமாற்றம் அளிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
நியுசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதலாவது ஒருநாள் போட்டியில் கில் தனது மூன்றாவது சதத்தை அடித்தார்.
வெறும் 87 பந்துகளில் அவர் சதத்தைக் கடந்தார்.
23 வயதான கில் ஒரு டெஸ்ட் சதத்தையும் பெற்றுள்ளார்.
இது கில் அடுத்தடுத்து பெறும் இரண்டாவது தொடர் சதமாகும்.
அவர் திருவனந்தபுரத்தில் இலங்கைக்கு எதிராக 116 ஓட்டங்களை எடுத்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், கில் 19 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்தார்.
விராட் கோலி மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரையும் விஞ்சி, குறைந்த இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்கைளக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் எட்டியுள்ளார்.
கில் இப்போது பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக்குடன் இணைந்து 1000 ஓட்டங்களை மிக வேகமாக கடந்த இரண்டாவது வீரர் உள்ளார்.
அவர் 19 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களை எட்டியதன் மூலம், விவ் ரிச்சர்ட்ஸ், பாபர் அசாம், கெவின் பீட்சர்சன், ஜொனாதன் ட்ராட், குயின்டன் டி கொக் மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென் போன்றவர்களை முந்தியுள்ளார்.
இவர்கள் அனைவரும் 21 இன்னிங்ஸில் 1000 ஒருநாள் ஓட்டங்களை எடுத்தனர்.
பாகிஸ்தானின் ஃபகர் சமான் (18 இன்னிங்ஸ்) ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 1000 ஓட்டங்களைக் கடந்தவராவார்.