இந்திய அணியுடனான கிரிக்கட் தொடரில் மாற்றம் ஒன்றை சிறிலங்கா கிரிக்கட் கோரியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி முதலில் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பின்னர் 3 – 20க்கு20 போட்டிகளிலும் விளையாட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த தொடரில் முதலில் 20க்கு20 போட்டிகளையும் பின்னர் டெஸ்ட் போட்டிகளையும் நடத்துமாறு சிறிலங்கா கிரிக்கட் கோரியுள்ளது.
இந்த தொடருக்கு முன்னதாக அவுஸ்திரேலியா செல்கின்ற இலங்கை அணி அங்கு 20க்கு20 கிரிக்கட் போட்டிகளிலேயே விளையாடவுள்ள நிலையில், உயிர்க்குமிழிக்கு உட்பட்ட அந்த அணியையே இந்தியாவுக்கு அனுப்ப இலகுவாக இருக்கும் என இலங்கை கருதுகிறது.
இதற்கு இன்னும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இன்னும் பதிலளிக்கவில்லை என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.