சிக்கலுக்குள்ளான 2026 பொதுநலவாய விளையாட்டுக்கள்

9 months ago
Athletics
(142 views)
aivarree.com

அவுஸ்திரேலிய மாநிலமான விக்டோரியா 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை நடத்தாது என்று மாநிலப் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார்.

போட்டிகளுக்கான செலவீன அதிகரிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை இந்த திடீர் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பல விளையாட்டு நிகழ்வின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

டேனியல் ஆண்ட்ரூஸ் செவ்வாயன்று மெல்போர்னில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

போட்டிகளுக்கான ஆரம்ப மதிப்பீடுகள் 2.6 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாக ($1.7 பில்லியன்) கணிக்கப்பட்டது, ஆனால் புதிய மதிப்பீடுகளின்படி அது 7 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ($4.77 பில்லியன்) உயரலாம் என்று கூறியுள்ளார்.

பொதுநலவாய விளையாட்டு என்பது 72 பொதுநலவாய நாடுகள் மற்றும் பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய பல விளையாட்டு நிகழ்வு ஆகும்.

இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

இறுதியாக நிகழ்வு 2022 இல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்றமையும் குறிப்பிடத்கத்கது.