சர்வதேச போட்டியில் விளையாடவுள்ள முதல் திருநங்கை கிரிக்கெட் வீரர்

1 year ago
Cricket
(268 views)
aivarree.com

கனடாவின் டேனியல் மெக்கஹே, சர்வதேச போட்டியில் விளையாடும் முதல் திருநங்கை கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.

பங்களாதேஷில் 2024 மகளிர் டி:20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்கான கனடா அணியில் மெக்கஹே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

29 வயதான தொடக்க ஆட்டக்காரர், செப்டம்பர் 4-11 வரை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் நிகழ்வுக்கு முன்னதாக, சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் (ஐசிசி) ஆண்-பெண் திருநங்கை வீரர்களுக்கான தகுதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.

டேனியல் மெக்கஹே 2020 பெப்ரவரியில் அவுஸ்திரேலியாவிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார், 2020 நவம்பரில் சமூக ரீதியாக ஒரு பெண்ணாக மாறினார் மற்றும் 2021 மேயில் மருத்துவ ரீதியாக மாறத் தொடங்கினார்.

இது குறித்து பிபிசி யிடம் அவர்,


“நான் முற்றிலும் பெருமைப்படுகிறேன். எனது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது என்னால் முடியும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை” – என்று கூறியுள்ளார்.