சர்ச்சையில் சிக்கிய பாபர் அசாம்

1 year ago
Cricket
(493 views)
aivarree.com

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பவர் பாபர் அசாம் .

அந்நாட்டு அணியின் மூன்று விதமான போட்டிகளுக்கும் இவரே தலைவராக இருந்து வருகிறார் .

தற்போதைய காலத்தில் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார் .

17 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து அணி பாக்கிஸ்தானுக்கு சுற்றுபயணம் சென்று அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது .

சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த தொடரை பாகிஸ்தான் அணி இழந்தது பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது.

பின்னர் பாபர் அசாமை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்தும் வந்து கொண்டிருந்தது.

தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாபர் அசாம் .

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவர் ‘ நான் பாக்கிஸ்தான் அணியின் வீரர் ஒருவரின் காதலி என்னுடன் பேசிய பாபர் அசாம் உனது காதலர் அணியில் இருக்க வேண்டும் என்றால் தொடர்ந்தும் என்னிடம் பேச வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறார்” என்று பாபர் அசாம் பேசும் வீடியோவையும் இணைத்துள்ளார் .

இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாபர் அசாமை விமர்சித்தும் வருகின்றனர்.

2020ஆம் ஆண்டு ஹம்சா முக்தர் என்ற பெண் “தன்னுடன் இருந்த புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவேன் ” என பாபர் அசாம் மிரட்டுவதாக இந்த பெண்கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .