கோலியை முந்திய வோர்னர்

4 months ago
Cricket
(121 views)
aivarree.com

இந்திய கிரிக்கட் அணியின் வீரர் விராட் கோலியின் சாதனையை அவுஸ்திரேலிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் தாண்டி சென்றுள்ளார்.

இதுவரையில் உலகக்கிண்ண தொடர்களில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

அவர் 45 போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்து 278 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

ரிக்கி பொன்டிங், குமார் சங்கக்கார ஆகியோர் இரண்டாம் மூன்றாம் இடங்களில் உள்ளனர்.

இதனை அடுத்து விராட் கோலி 1384 ஓட்டங்களைப் பெற்று நான்காம் இடத்தில் இருந்தார்.

எனினும் டேவிட் வோர்னர் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 81 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் மொத்தமாக ஆயிரத்து 405 ஓட்டங்களைப் பெற்று கோலியை முந்தியுள்ளார்.