கொழும்பில் சூதாட்ட விடுதிக்கு சென்று சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அதிகாரிகள்

6 months ago
Cricket
(124 views)
aivarree.com

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஊடக மேலாளர் ஊமர் பாரூக் கல்சன் மற்றும் அணியின் பொது முகாமையாளர் அட்னன் அலி ஆகிய இருவரும் கொழும்பில் அமைந்துள்ள சூதாட்ட விடுதிக்கு சென்ற வீடியோ வெளியாகி உள்ளது.

இந் நிலையில் இது குறித்து தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஐசிசி விதிகளின்படி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அணியை சார்ந்த அதிகாரிகள் யாரும் சூதாட்டம் சார்ந்த இடங்களுக்கு செல்லக் கூடாது.

இந்நிலையில் அவர்கள் குறித்த விதி முறைகளை மீறியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் ஊடகங்களில் வீடியோ ஆதாரத்துடன் வெளியான நிலையில் குறித்த அதிகாரிகள் இருவரும், தாங்கள் இரவு உணவு உண்ணவே அந்த சூதாட்ட விடுதிக்கு சென்றதாக கூறியுள்ளனர்.

எவ்வாறெனினும் இது தொடர்பான விசாரணைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், ஐசிசியும் தற்சமயம் ஆரம்பித்துள்ளன.